இலங்கையின் மின்சாரத் துறை வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக ரஷ்யத் தூதுவர் உறுதியளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

இலங்கையின் மின்சாரத் துறை வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக ரஷ்யத் தூதுவர் உறுதியளிப்பு

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மாதேரிக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது ரஷ்யத் தூதுவர் இலங்கையின் மின்சாரத் துறை வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார். 

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகாபெருமாவுடன் உத்தியோகபூர்வ கூட்டத்தில் கலந்துகொண்ட ரஷ்ய தூதர், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளையும் பொருளாதார ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும கவனம் செலுத்தினார். 

இலங்கை மின்சார துறைக்கு அணு தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், இலங்கை அணுசக்தி வாரியத்திற்கு அறிவு, பயிற்சி மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ரஷ்யாவின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தயாராக உள்ளதாகவும் ரஷ்ய தூதுவர் யூரி மாதேரி சுட்டிக்காட்டினார். 

நிலையான வளர்ச்சி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் மின் துறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தூதருக்கு விளக்கமளித்த மின்சார அமைச்சர் டலாஸ் அழகபெருமா, பசுமை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டிய உலகளாவிய தேவையையும் காட்டினார். 

அது மாத்திரமன்றி இலங்கையின் மின்சார துறையின் வளர்ச்சிக்காக ரஷ்யா கைகோர்த்தமைக்கும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையை பாதித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இலங்கைக்கு ரஷ்யா இராஜதந்திர ஆதரவை வழங்கியதற்காக மின்சார அமைச்சர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.

No comments:

Post a Comment