பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மேல் மாகாண விசேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொடை சந்தையில் அவர்கள் தங்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment