கடற்படை விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் இரு விமானிகள் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

கடற்படை விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் இரு விமானிகள் பலி

அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அலபாமா மாநிலம் போலே நகரில் கடற்படையின் சிறிய ரக விமானத்தில் 2 விமானிகள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து தீப்பிடித்தது. இதனால் வீடுகள் மற்றும் பல்வேறு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment