கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளின் கொள்வனவு மற்றும் விநியோகத்திற்காக 12 பில்லியன் டொலர் நிதிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட உதவ அடுத்த ஆண்டு ஜூன் வரை, உலக வங்கி 160 பில்லியன் டொலர் ஒதுக்கியிருந்தது.

அதன் ஓர் அங்கமாக 12 பில்லியன் நிதி வழங்கப்படும். “கொவிட் அவசர நிலையை கையாள்வதற்கு எமது விரைவான செயற்பாட்டை நீடித்து விரிவுபடுத்துவதன் மூலம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு நியாயமான மற்றும் சமமான வகையில் தடுப்பு மருத்துகளை பெற முடியுமாக இருக்கும்” என்றும் உலக வங்கி வலியுறுத்தியது.

உலகெங்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 38 மில்லியனைத் தாண்டி இருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment