இலங்கையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளது - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

இலங்கையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளது

இலங்கையில் உள்ள 12 கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் மொத்தம் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளன என்று கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

மினுவங்கொடையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,544 படுக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் மினிவங்கொடை கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad