உடன் அமுலாகும் வகையில், இன்று (27) காலை முதல் ஹட்டன் நகரம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை குறித்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் பல கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment