20 வது திருத்தத்தால் அரச இயந்திரத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும் - நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

20 வது திருத்தத்தால் அரச இயந்திரத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும் - நீதி அமைச்சர் அலி சப்ரி

அரசாங்கத்திற்கு வலுவானதொரு நிர்வாகத்தை முன்னெடுக்க 20 வது திருத்தம் வழியமைத்துள்ளது. இதனால் அரச இயந்திரத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

தேர்தல்கள், பொதுச் சேவை, மனித உரிமைகள் மற்றும் ஊழல் விசாரணைக்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் ஜனாதிபதிக்கு நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் முடியும். பொதுத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தின் பல பிரிவுகள் ஜனாதிபதி அதிகாரத்தை பலப்படுத்தும். உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்தார்.

அரசியலமைப்பை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு இல்லை என்றாலும், வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

சில்மியா யூசுப்

No comments:

Post a Comment