பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

தொம்போ, பூகொட பகுதியில் அமைந்துள்ள 'South Asia Textiles Limited' ஆடைத் தெடாழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த கைத்தொழிற்சாலையில் ஊழியர்கள் 50 ​பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி முதல் குறித்த கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad