சிலாபத்தில் ஒருவருக்கு கொரோனா - அருட்தந்தையர்கள் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

சிலாபத்தில் ஒருவருக்கு கொரோனா - அருட்தந்தையர்கள் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சிலாபம் - அபகந்தவில பகுதியில் ஒருவருக்கு இன்று (08) மதியம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் வேறு ஒரு நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 06 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முடிவுகள் இன்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொற்றாளரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக இரணவிலவில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குறித்த தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்களை தேடி சுகாதார அதிகாரிகள் இன்று மதியம் முதல் அம்பகந்தவில மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இருவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த தினம் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment