பிரன்டிக்ஸ் கொரோனா தொற்று - ஆராயகுழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 13, 2020

பிரன்டிக்ஸ் கொரோனா தொற்று - ஆராயகுழு நியமனம்

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவை தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமித்துள்ளார்.

தொழில் ஆணையாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த 5ஆம் திகதி கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என ஆயிரத்து 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad