ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கெஹெலிய

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவிலயாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இது தொடர்பான அறிக்கையை நாம் கோரியுள்ளோம். அறிக்கை கிடைத்த பின்னர் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13.10.2020) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment