பிரன்டிக்ஸ் நிறுவன தலைவர் தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு கடிதம் - அதில் தெரிவித்திருப்பது என்ன? - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

பிரன்டிக்ஸ் நிறுவன தலைவர் தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு கடிதம் - அதில் தெரிவித்திருப்பது என்ன?

பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஸ்ரவ் ஓமார் தனது தொழிற்சாலை பணியாளர்களுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார் என கொழும்பு கசட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நிறுவனத்தின் ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து வந்தவேளை தனது நிறுவனம் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை என அஸ்ரவ் ஓமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் என கொழும்பு கசட் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களையோ வேறு பொருட்களையோ மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு கொண்டுவரவில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் பாதுகாப்பு நலன்கள் புறக்கணிக்கப்பட்டன என வெளியாகியுள்ள அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று பொறுப்புக்கூறல் செய்யப்படும் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் ஊழியர்களின் உடல்நலமும் பாதுகாப்புமே எங்களின் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என்பதால் இந்த விடயம் குறித்து அலட்சியமாகயிருந்த எந்த அதிகாரியும், அவர் எந்த தரத்தில் உள்ளவராகயிருந்தாலும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மினுவாங்கொடையில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் சுயாதீன விசாரணையை முன்னெடுத்துள்ளோம் தேவையான இடத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம் என குறிப்பிட்டுள்ள அஸ்ரவ் ஒமார் மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரன்டிக்ஸின் முதலாவது தொழிலாளி ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறினை எதிர்கொண்டுள்ளார் என பிரன்டிக்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதனை ஆதரிக்கவில்லை, எங்களை நம்பி எங்கள் வர்த்தகத்திற்கு தங்களை அர்ப்பணித்துள்ள ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவாக உள்ளது போல, நாங்கள் அவருக்கு ஆதரவாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிழையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன தயவுசெய்து அவ்வாறான தகவல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் தொழிற்சாலை பணியாளர்களே எங்கள் ஸ்தாபனத்தின் உயிர்நாடி அவர்கள் எதிர்கொண்டுள்ள தாக்கம் குறித்து நான் பெருந்துயரடைந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment