மீன்களை கொள்வனவு செய்ய கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை, வரி நீக்கம் - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

மீன்களை கொள்வனவு செய்ய கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை, வரி நீக்கம் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 தாக்கத்தினால் பொதுமக்களின் மீன் கொள்வனவு குறைந்துள்ளது. இதனால் குவிந்துள்ள மீன்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தற்போது பல மீன்பிடி துறைமுகங்களில் கடற்தொழில் கூட்டுத்தாபனம் மீன்களை கொள்வனவு செய்வதில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்

இன்று நடைப்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் செயல்பட்டு மீன்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் கடல் தொழில்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன வீஜேசேகர ஆகியோர் இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

3 தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியிருப்பதாகவும் 72 மணித்தியாலயத்திற்குள் மீன்களை கரைக்கு கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறையை நீக்கப்படுவதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கமைவாக பிடிக்கப்பட்ட மீன்களில் ஒரு தொகையை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகள் காரணமாக டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி நிவாரணத்தை நீக்கி இந்த மீன் விற்பனைக்கு தேவையான ஆற்றலை பெற்றுக் கொடுப்பதற்காக பெருந்தொகையில் டின் மீன்களை தயாரிப்பதற்காக டின் மீன் தொழிற்சாலைகள் அவற்றை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment