மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை

டிக்கோயா பட்டல்கலை தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகள் புனரமைக்கப்பவுள்ளன. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் நேற்றைய தினம் பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த முன்று வீடுகள் முற்றாக சேதமடைந்தன.

இதனைக் கேள்வியுற்ற இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரடியாக இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து சேதமடைந்த வீடகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட குடுமபங்களையும் சந்தித்து உரையாடினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் உரிய பகுதியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

குடியிருப்புகளையும் புனரமைக்குமாறு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு இந்த அனர்த்தத்தின் போது பத்தனை கல்வியற் கல்லூரி மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டு கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவியை அமைச்சர் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் அவரது நலன்களையும் கேட்டறிந்தார்.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பாரத் அருள்சாமி, நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad