“கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்” - சம்மாந்துறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

“கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்” - சம்மாந்துறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

ஐ.எல்.எம் நாஸிம் 

சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் ஆகியோருடன் இணைந்து “கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்று (17) சம்மாந்துறை நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

சம்மாந்துறை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நெளஷாத், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஜயலத், சம்மாந்துறை பிரதான நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி எம்.மஹ்ருப், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்கள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச நிறுவனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், நகர் பகுதி மற்றும் பொதுச்சந்தை பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad