ஏறாவூர் நகர சபை பிரதித் தலைவரைத் தாக்கியதான முறைப்பாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருக்கு பிணை - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

ஏறாவூர் நகர சபை பிரதித் தலைவரைத் தாக்கியதான முறைப்பாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருக்கு பிணை

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் நகர சபை பிரதித் தலைவரைத் தாக்கியதான முறைப்பாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகர சபையின் உறுப்பினர் முஹம்மத் சுல்தான் முஹம்மத் றியாழ் தன்னைத் தாக்கியதாக ஏறாவூர் நகர சபையின் பிரதித் தலைவர் மீராலெப்பை ரெபுபாசம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேக நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மாவட்ட பதில் நீதிவான் வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சந்தேக நபரை ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்த நீதிவான் அடுத்த வழக்கை நொவெம்பெர் 20 இற்கு திகதி குறிப்பிட்டார்.

ஏறாவூர் நகர சபையின் விஷேட அமர்வும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பும் திங்கள்கிழமை 12.10.2020 ஏறாவூர் நகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்று சபையின் வாக்கெடுப்பு முடிவடைந்து கூட்டம் நிறைவுற்றதின் பின்னர் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு ஏற்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad