கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, எதிர்வரும் வாரம் (ஒக்டோபர் 12 -16) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான அலுவலக நேரங்களில் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது, மின்னஞ்சல் ஊடாகவோ உரிய பிரிவுகளுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment