வடகிழக்கு ரமல்லாவின் துர்முஸ் அய்யா நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காயமடைந்த பலஸ்தீன இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஆமர் அப்தல் ரஹீம் ஸ்னோபர் என்ற அந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அந்தக் காயம் காரணமாக அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“பலஸ்தீனராக இருக்கின்ற ஒரே குற்றத்திற்காக பாதுகாப்பற்று இருக்கும் இளைஞர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கொடிய முறையில் தாக்குகின்றன” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரமல்லா பகுதியில் இராணுவ வாகனத்தின் மீது கல்லெறிந்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment