கொழும்பு ஐ.சி.பி.டி. கெம்பஸ் மாணவனுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

கொழும்பு ஐ.சி.பி.டி. கெம்பஸ் மாணவனுக்கு கொரோனா

கொழும்பு பம்பலபிட்டி தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் இறுதியாக கடந்த 4ஆம் திகதி ஐ.சி.பி.டி வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக ஐ.சி.பி.டி. கெம்பஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தற்போது குறித்த மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 4 ஆம் திகதிக்கு பின்னர் ஐ.சி.பி.டி. கெம்பஸுக்கு வருகை தந்தோர் விழிப்பாகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment