கொரோனா தொற்று தொடர்பான தவறான தகவல்களை நம்ப வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேளையில், ஒரு பலமான தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றிகண்டோம்.
தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் நம் நாட்டிற்குள் வந்துள்ளது. முன்னரைப் போலவே, எமது சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவை துறைகளை சேர்ந்தவர்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து நம்மைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரசாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment