கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் 3ம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் தடுப்பூசி பிரிசோதனையை தற்காலிகமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுத்தி வைத்துள்ளது. 60 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பான வகையில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment