ஊரடங்கு நடைமுறையை கடுமையாக பேண நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

ஊரடங்கு நடைமுறையை கடுமையாக பேண நடவடிக்கை

கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (13) முதல் கடுமையாக கடைப்பிடிக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயினும், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது எனவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றைய (12) நிலவரப்படி புதிதாக 90 ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இத்தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடை கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad