ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன் : அமெரிக்க ஜனாதிபதி குறும்பு பேச்சு - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன் : அமெரிக்க ஜனாதிபதி குறும்பு பேச்சு

கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முகக் கவசம் அணியாமல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக் கவசம் அணியமாட்டேன் என்று கெத்தாக கூறியவர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார்.

கடந்த வாரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பிய டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ள தீவிரம் காட்டி வருகிறார். புளோரிடாவில் தேர்தல் பிரசாரத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாஸ்க் அணியாமல் மேடையில் தோன்றினார்.

அப்பேது டொனால்ட் ட்ரம்ப் ‘‘பவர்புல் ஆக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்’’ என்று தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் கூறினார். கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்ததால் அப்படி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment