இருபதாவது திருத்தம் ராஜபக்ஷக்களின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் - சஜின் வாஸ் குணவர்த்தன - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

இருபதாவது திருத்தம் ராஜபக்ஷக்களின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் - சஜின் வாஸ் குணவர்த்தன

இருபதாவது திருத்தம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் ஆட்சி முறையில் அது பாரிய தாக்கத்தை செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபதாவது திருத்தம் ஜனாதிபதியை மாத்திரம் பலப்படுத்தும், யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரை அது பலப்படுத்தும் என சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தத்தின் நகல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சச்சரவின் வெளிப்பாடாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவின் ஒரு பகுதி என நீங்கள் கருதுகின்றீர்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் காணப்படுகின்றார். அதேவேளை பிரதமர் தனது வாரிசுகளை கருத்தில் கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க முயல்கின்றார் என சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தம் என்பது ராஜபக்சக்களின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் விடயமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad