நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம்

பாறுக் ஷிஹான்

தினமும் நுளம்புக் கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பின்பகுதியிலுள்ள வெட்டு வாய்க்கால் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதனால், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த சீர்கேட்டினால் தினமும் நுளம்பின் பெருக்கம் ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபை கவனயீனமாகச் செயற்படுவதாகவும், தற்போது டெங்கு அச்சுறுத்தலினால் 3 வயதுக் குழந்தையொன்று இப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளது.

சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்ற இவ்வீட்டுத் திட்டத்திற்கு அருகிலுள்ள குறித்த வெட்டு வாய்க்காலை துப்பரவு செய்து தந்துதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad