நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆடை தொழிற்சாலையின் கொத்தணி தொற்றின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்துவதையும், தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடிப்பதன் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் போலி செய்திகள் பரவி வருவதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன் குமார் தெரிவித்தார்.
மக்களை அநாவசியமாக குழப்பும் வகையில் போலிச் செய்திகளை பரப்பக்கூடாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வைரஸ் தொற்று குறித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இது அரசியல் இலாபம் தேடும் நேரமல்ல.
எதிர்க்கட்சி என்றாலும் ஆளும் கட்சி என்றாலும் அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment