பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி மீது வல்லுறவு - 21 வயது நபருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி மீது வல்லுறவு - 21 வயது நபருக்கு விளக்கமறியல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியொருத்தியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திங்களன்று 12.10.2020 ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

மாவடிவெம்பு 02 நாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் கூலித் தொழிலாளியான அந்நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியான மேற்படி சிறுமியை கடந்த 08ஆம் திகதி சந்தேகநபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தததையடுத்து ஞாயிற்றுக்கிழமை 11.10.2020 பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொலிஸார் சந்தேநபரை உடனயாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இச்சம்பம்வத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment