பழ மரங்களில் அதிக விளைச்சலைப் பெறும் நோக்கில் மாபெரும் விவசாய விழிப்பூட்டல் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

பழ மரங்களில் அதிக விளைச்சலைப் பெறும் நோக்கில் மாபெரும் விவசாய விழிப்பூட்டல் நிகழ்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பழ மரங்களில் வினைத்திறனான விளைச்சலைப் பெறுவதற்கு வழிகாட்டும் மாபெரும் விவசாய விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனையில் சனிக்கிழமை 24.10.2020 இடம்பெற்றது.

பிரதேச விவசாயப் போதனாசிரியை லாவன்யா செந்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழமரச் செய்கையாளர்கள் விவசாயிகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம் உதவிச் செயலாளர் கே. பவதாரணி விவசாய பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா வடக்கு வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்தரவேல் உட்பட இன்னும் பல விவசாய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு பழமரங்களை கத்தரித்தல் பயிற்றுவித்தல் பசளையும் பசளைப் பாவனையும் தொடர்பான செய்கை முறையிலமைந்த விழிப்பூட்டல்கள் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய விவசாய பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா “இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகளை விவசாயத் திணைக்களம் ஒழுங்கு செய்வதன் நோக்கம் இந்த மாவட்டம் சுய சார்பு உணவு உற்பத்தியை மேற்கொண்டு தன்னிறைவு அடைவதோடு தேசிய மட்டத்திற்கும் தனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதாகும்.

இந்த மாவட்ட மக்கள் போஷனை மிக்க உணவுகளைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அத்தகைய பாரிய பொறுப்பை விவசாயத் திணைக்களமும் சுமந்து நிற்கின்றது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே சவால் நிறைந்த இந்தக் கால கட்டத்தில் நாம் மீண்டும் எமது தற்சார்பு உற்பத்திக்குத் திரும்ப வேண்டும்” என்றார்.‪

No comments:

Post a Comment