அமெரிக்காவில் ஆளுநரை கடத்த முயன்றவர்கள் சிக்கினர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

அமெரிக்காவில் ஆளுநரை கடத்த முயன்றவர்கள் சிக்கினர்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநரை கடத்தத் திட்டமிட்டதாக 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அவரது விடுமுறை வீட்டிலிருந்து அவரைக் கடத்த திட்டமிட்டு அவரின் மீது தேசத் துரோக வழக்கை அவர்கள் தொடுக்கவிருந்ததாக நம்பப்படுகிறது.

வொல்வரின் வொட்ச்மன் என்ற கிளச்சியாளர் குழுவில் இருந்த மற்ற 7 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இவ்வாண்டு ஆரம்பத்தில் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் வழி அரசாங்கம், சட்ட அமுலாக்கத் துறைகளில் உள்ளவர்களை ஆட்சிக் கவிழ்ப்பு செய்யத் திட்டமிடப்படுவதை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது.

கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு மிச்சிகன் மாநிலத்தில் கட்டுப்பாடுகளை ஆளுநர் விட்மர் விதித்ததால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து அதிக கண்டனத்தை எதிர்நோக்கினார்.

வெறுப்பைத் தூண்டும் குழுக்களை வெளிப்படையாகக் கண்டிக்காமல், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதால் கடத்தல் சதித்திட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப்பிற்கும் பங்கிருப்பதாகக் கூறினார் விட்மர்.

No comments:

Post a Comment