கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் அமெரிக்க சிறுமி - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த 17 வயது சிறுமி உலகில் நீண்ட கால்களை உடையவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

2021ஆம் அண்டுக்கான கின்னஸ் புத்தகத்தின் பதிப்பில் மசி கர்ரின் என்ற அந்த சிறுமி உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண் மற்றும் நீண்ட கால்களைக் கொண்ட பதின்ம வயதுடையவர் என்ற இரு சாதனைகளில் இடம்பிடிக்கவுள்ளார்.

அவரது கால்கள் 53 அங்குலத்திற்கு மேல் நீலம் கொண்டது என்றபோதும் வலது கால் 52.874 அங்குலம் சற்று நீளம் குறைவாக உள்ளது என்று கின்னஸ் புத்தகம் குறிப்பிட்டுள்ளது. அவர் 6 அடி 10 அங்குலம் உயரம் உடைவர் என்பதோடு அந்த உயரத்தில் 60 வீதம் கால் பகுதியாக உள்ளது. 

உயர்ந்த பெண்கள் அதனை ஒரு கொடையாக கருதுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அதற்காக வெட்கப்படத் தேவையில்லை என்றும் கர்ரின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment