பூனை வளர்க்க ஆசைப்பட்டு புலிக் குட்டியை வளர்த்துவிட்ட தம்பதியினர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

பூனை வளர்க்க ஆசைப்பட்டு புலிக் குட்டியை வளர்த்துவிட்ட தம்பதியினர்

பிரான்ஸ் நாட்டில் ஒரு தம்பதி ஒன்லைனில் பூனைக்குட்டி வாங்கி வளர்க்க முடிவு செய்து விபரீதத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. 

பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே எனும் பகுதியில் வசிக்கும் இந்தத் தம்பதி சவன்னா எனும் பூனை குட்டியை வளர்க்க முடிவு செய்து அதை ஒன்லைனில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒன்லைன் விளம்பரத்தில் காட்டப்பட்ட படத்தை பூனைக்குட்டி என நம்பி இந்திய மதிப்பில் ரூபா. 5 லட்சத்தை செலுத்தி அதை அந்தத் தம்பதி வாங்கவும் செய்து இருக்கின்றனர். இச்சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்று இருக்கிறது. 

ஆனால் பூனைக்குட்டி வளர வளர அது பூனை மாதிரியே தெரியாததால் சந்தேகம் அடைந்த அந்த தம்பதியினர் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியிருக்கின்றனர்.

லே ஹார்வே பகுதிக்கு விரைந்த பொலிசார் இது பூனைக் குட்டியே இல்லை புலிக்குட்டி. அதுவும் பாதுகாக்கப்பட்ட வகையைச் சேர்ந்தது எனக் கூறியவுடன் அவர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். 

இதையடுத்து, அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேஷியாவின் சுமத்ரான் வகை புலி என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 2 வருட விசாரணைக்கு பிறகு பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்திய குற்றத்திற்காக தம்பதி உட்பட 9 பேரை பொலிசார் கைதும் செய்து இருக்கின்றனர். 

பின்னர் இந்த வழக்கை பெரிதுப்படுத்தாத பொலிசார் அவர்களை விசாரித்து விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment