இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்ட 73 பேர் இன்று வீட்டுக்கு திரும்பினர் - நேற்று 10,740 PCR சோதனைகள், இதுவரை 469,258 சோதனைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்ட 73 பேர் இன்று வீட்டுக்கு திரும்பினர் - நேற்று 10,740 PCR சோதனைகள், இதுவரை 469,258 சோதனைகள்

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றையதினம் (28) 73 நபர்கள், தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி,

நிபுண பூஸா தனிமைப்படுத்தல் நிலையம் 10 பேர்

ஹபராதுவ பொலிஸ் கட்டட தனிமைப்படுத்தல் நிலையம் 6 பேர்

இராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையம் 4 பேர்

டொல்பின் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையம் 21 பேர்

ஜெட்வின் ப்ளூ ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையம் ஒருவர் (01)

கொஸ்கொடை ஷெரடன் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையம் 21 பேர்

கிறீன் பரடைஸ் தனிமைப்படுத்தல் நிலையம் 5 பேர்

கொக்கல ரிசோர்ட் தனிமைப்படுத்தல் நிலையம் 5 பேர்

அந்த வகையில், முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (28) வரை 58,396 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் பணியை முடித்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 75 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,530 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன். நேற்றையதினம் (27) மாத்திரம் 10,740 PPR சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 469,258 PCR சோதனைகள் இலங்கையில் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் குணமடைந்த 110 பேரும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment