200 யெமனிக்களுக்கு பகரமாக அமெரிக்கர் இருவர் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

200 யெமனிக்களுக்கு பகரமாக அமெரிக்கர் இருவர் விடுதலை

யெமன் நாட்டில் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்.

யெமன் நாட்டில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படையினருக்கும், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் இடையே 2014ம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நீடிக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த மனித நேய பணியாளர் சாண்ட்ரா லோலியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தனர். 

இதேபோன்று அமெரிக்க தொழில் அதிபர் மைக்கேல் கிடாடாவையும் ஒரு வருடத்துக்கு மேலாக தங்கள் பிடியில் பிணைக் கைதியாக வைத்திருந்தனர்.

இப்போது அவர்கள் இருவரையும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்து விட்டனர். இதை அமெரிக்க அரசு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மேலும், அங்கு கொல்லப்பட்ட அமெரிக்க பிணைக் கைதியான பிலால் பதீனின் உடலையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஓமனில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று, தவித்து வந்த 200க்கும் மேற்பட்ட யெமன் நாட்டினர் விடுவிக்கப்பட்டு, திரும்ப அனுப்பப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை நடவடிக்கையை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எடுத்து இருக்கிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க பிணைக் கைதிகள் 2 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது.

No comments:

Post a Comment