உள்ளூர் பெரிய வெங்காயத்தை ரூபா 100 இற்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

உள்ளூர் பெரிய வெங்காயத்தை ரூபா 100 இற்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு

பெரிய வெங்காயச் செய்கை விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தை ரூபா 100 இற்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட்-19 காரணமான சிரமங்களை கருத்திற் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, தகரத்திலடைத்த மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை அரசாங்கம் நீக்கியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நியாயமான விலையில் விற்க முடியாது என விசனம் தெரிவித்திருந்தனர்.

இதனைக் கருத்திற் கொண்டு, அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ஊடாக, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூபா 100 இற்கு கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad