குச்சவெளி ஆளம்குளம் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

குச்சவெளி ஆளம்குளம் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குச்சவெளி ஆளம்குளம் காணிப் பிரச்சினை சம்மந்தமாக விசேட கலந்துரையாடல் இன்று (14) இடம்பெற்றது. 

இதன்போது இக்காணிகள் அளவையிடுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி இரண்டு வாரத்திற்குள் நில அளவைத் திணைக்களத்தினால் காணியை அளந்து உரிய பொதுமக்களிடம் வயல் காணிகளை அடையாளம் கண்டு அதனை தீர்த்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் M.S. தௌபீக், குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளர் A. முபாறக், குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன், குச்சவெளி பிரதேச சபையின் உப தவிசாளர் A.S.M. சாஜித், பிரதேச சபையின் உறுப்பினர் A.C.M. மீசான், RFO திரு. பண்டார, முன்னாள் மாகாண சபை வேட்பாளர், பளீல் அமீன், பிரதேச சபையின் வேட்பாளர்களான முஜீப் ரகுமான், சமீம், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad