மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு நிதி கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு நிதி கையளிப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி வர்த்தக சமூகத்தினால் மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷனின் பிரதான ஒழுங்கு படுத்தலுடன் சேகரிக்கப்பட்ட நிதியினை EASCCA_HOSPICE அமைப்பின் தலைவர் புற்றுநோயியல் வைத்திய நிபுணர் Dr.A. இக்பால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையத்தின் அத்தியாவசியமானதும் மிக நீண்ட நாள் தேவையுமாக இருந்த அம்பியூலன்ஸ் வண்டியின் கொள்வனவிற்காக 1.6 மில்லியன் ரூபாய் நிதி மிக அவசரமாக சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்னுமொரு காத்தான்குடி வர்த்தக சகோதரர் இந்த நன்மைகள் நிறைந்த பணிக்கு 2.5 மில்லியன் பணத் தொகையை வழங்கத் தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் மிக விரைவாக இந்த இலக்கை அடைய முடியும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad