உளுந்து இறக்குமதிக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

உளுந்து இறக்குமதிக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்பு

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதியின் செயலாளருக்கு நேற்றுக் காலை (18) இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ். வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு பிரதமர் நேற்றுக் காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment