நூருள் ஹுதா உமர்
பெப்ரவரி தொடக்கம் ஆகஸ்ட் மாதத்திற்கான வீட்டு சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட 06 காரைதீவு பிரதேச செயலக நிர்வாக பிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்த காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (23) காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் அச்சுமுஹம்மட், முகாமைத்துவப் பணிப்பாளர் யு.எல் ஏ.ஹமீட், வங்கி முகாமையாளர் எஸ்.எஸ்.சதீஸ், வலய உதவி முகாமையாளர் வி.சுதர்சன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment