நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி

இலங்கையில் அனைத்து செயற்பாடுகளையும் வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில்  ஜனாதிபதி கவனம் - Tamilwin
அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள் மற்றும் பின்புலம் பரீட்சிக்கப்பட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயலுமான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் குறிப்பிட்டார்.

ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனால் சில நியமனங்களுக்கு எதிராக அதனை மாற்றுமாறு தமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

நியமனங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை முன்வைப்பதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகள், விடயதானங்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு முடியாமல் போவதோடு மட்டுமன்றி சமுதாயத்தில் அந்நபர்கள் பற்றி தப்பான எண்ணங்கள் ஏற்படுவதினால் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களும் வீணடிக்கப்படுமென்பதே தனது கருத்தாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad