பால்கன் விளையாட்டுக் கழகத்தினால் ஹரீஸ் எம்.பி. கௌரவிப்பும், சீருடை அறிமுக நிகழ்வும் - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

பால்கன் விளையாட்டுக் கழகத்தினால் ஹரீஸ் எம்.பி. கௌரவிப்பும், சீருடை அறிமுக நிகழ்வும்

கல்முனை பால்கன் விளையாட்டுக் கழகத்தின் கௌரவிப்பு நிகழ்வும் புதிய சீருடை அறிமுக நிகழ்வானது 20.09.2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பால்கன் விளையாட்டுக் கழகமானது நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வெற்றியீட்டி எம் கல்முனை மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமாகிய எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களைக் கௌரவிக்குமுகமாகவும் அக்ஸான் இன்ஜினீயரிங் வேர்க் நிருவாக பணிப்பாளர் அல்ஹாஜ். கே.எல்.எம். அர்ஷாத் அனுசரணையில் தனது கழகத்திற்கு புதிய சீருடையை அறிமுகம் செய்வதற்கும் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்வை பால்கன் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் தலைமை தாங்கி நடத்தினார்கள் மேற்படி நிகழ்வில் பால்கன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் யூ.கே. லாபிர், பொருளாளர் முகம்மது நைசர் மற்றும் அணியின் நிருவாக குழு உறுப்பினர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யேக செயலாளர் நௌபர் ஏ பாவா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேற்குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸ் உரையாற்றும் பொழுது கல்முனை பிராந்தியம் விளையாட்டு போட்டிகளில் பிரசித்தி பெற்ற இடமாகும் நாடளாவிய ரீதியில் திறமைகாட்டிய பல வீரர்களை உருவாக்கிய மண் அந்த மண்ணிலிருந்து இவ்வாறான ஒரு கழகம் உருவாகியுள்ளது எம் அனைவருக்கும் பெருமையே. 

அதேபோல இவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் மென்மேலும் எமது பிராந்தியத்தில் உருவாக வேண்டும் அதேவேளை அவர்களுக்காக தான் முன்னின்று பல்வேறுபட்ட செயற்திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை எதிர்காலத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும். 

எமது கல்முனை கடற்கரை மைதானத்தின் மைதான அபிவிருத்திப் பணிகள், அதன் உட்கட்டமைப்பு மற்றும் எதிர்காலத்தில் அங்கு மேற்கொள்ளவேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் தான் அதீத கரிசனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை தனது பாராளுமன்ற நிதி ஒதுக்கீடுகள் மூலம் எமது அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய தான் உதவுவதாகவும் வாக்களித்தார்.

பிரதம அதிதிக்கு பால்கன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் யூ.கே. லாபிர் பொருளாளர் முகம்மது நைசர் உட்பட நிருவாக குழு அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதி அம்சமாக பால்கன் அணியின் புதிய சீருடையை அறிமுகம் செய்யுமுகமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்க்கு விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை 

கலந்துகொண்ட விளையாட்டுக் கழகத்தின் வீரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டு புதிய சீருடை அறிமுகம் செய்துவைக்கபட்டது.

No comments:

Post a Comment