மாணவனின் பல்லை உடைத்த ஆசிரியர் - வவுனியாவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

மாணவனின் பல்லை உடைத்த ஆசிரியர் - வவுனியாவில் சம்பவம்

வவுனியாவிலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் ஒருவர் பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், காலைப் பிரார்த்தனையின் போது (மைக்) ஒலி வாங்கி பழுதடைந்து விட்டது. இதையடுத்து காலைப் பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலி வாங்கியை எடுத்து வருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அம்மாணவன் ஒலி வாங்கியை எடுத்து வர மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவர்கள், 63 ஆசிரியர்கள் ஒன்றுகூடியிருந்த காலைப் பிரார்த்தனை நடைபெற்ற இடத்தில் வைத்து அம்மாணவனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் எவரும் தடுக்கவில்லை. பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவனின் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், பல்லும் உடைந்துள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad