புத்தர் சிலை வைக்க வேண்டாமென கூற விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை - டயானா கமகே - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

புத்தர் சிலை வைக்க வேண்டாமென கூற விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை - டயானா கமகே

புத்தர் சிலை வைக்க வேண்டாமென கூற விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை-Diana Gamage-CV Vigneswaran Speech
வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென, ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூறியுள்ளார். அவர் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையான என்பது எமக்கு முக்கியமில்லை. ஆனால், வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க வேண்டாமென கூறுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்தார்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

(லோரன்ஸ் செல்வநாயம், சுப்பிரமணியம் நிஷாந்தன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad