யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் அங்கஜன்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் அங்கஜன்!

இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாய அறிவியல் சம்மந்தமாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை சம்மந்தமான வளர்ச்சிகள் தொடர்பாகவும், யாழ்ப்பாணத்திற்கு தேவையான வீட்டுத்திட்டங்கள் சம்மந்தமாகவும், கல்வி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதனால் நினைவு பரிசு ஒன்றும் வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்களும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad