நியூ டயமண்ட் கப்பலுக்கு அருகில் நீர் மாதிரியை பெறுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

நியூ டயமண்ட் கப்பலுக்கு அருகில் நீர் மாதிரியை பெறுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

கப்பலுக்கு அருகில் நீர் மாதிரியை பெறுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை-AG Advice to Take Sample of Sea Water Around MT New Diamond
தீ விபத்தை எதிர்நோக்கிய நியூ டயமண்ட் (MT New Diamond) கப்பலுக்கு அருகிலுள்ள கடல் பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் கடல் நீர் மாதிரிகளை உரிய பகுப்பாய்விற்காக அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு, சட்டமா அதிபர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கப்பல் மூலம், இலங்கை கடலில் எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு, குறித்த கப்பலினால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மீட்பு நிறுவனத்திற்கு அறிவிக்குமாறும், சட்டமா அதிபர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த கப்பலில் நேற்றுமுன்தினம் (07) இரண்டாவது தடவை ஏற்பட்ட தீ மீண்டும் இன்று (09) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment