கண்டியில் மீண்டும் நில அதிர்வு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

கண்டியில் மீண்டும் நில அதிர்வு

கண்டி - பல்லேகல பகுதியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) காலை 7.06 மணிக்கு இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது உண்மையில் இயற்கையான நில நடுக்கமா அல்லது வேறு காரணத்தினால் ஏற்பட்டதா என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி, ஹரகாமா மற்றும் திஹானவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad