
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியுமென, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும் என, நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
முன்மொழியப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் வரைவு, நீதி அமைச்சின் செயலாளரினால், சட்ட மாஅதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 20ஆவது திருத்தத்தின் நகல் வடிவம் இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment