ஸ்மார்ட் தொலைபேசி விற்பனை மோசடியில் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

ஸ்மார்ட் தொலைபேசி விற்பனை மோசடியில் இருவர் கைது

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாகிறது டெக்னோவின் அதி நவீன  மாடல் போன் | Tecno's dot-in-display phone to launch under Rs 10K -  hindutamil.in
புதிய ரக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை குறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வகை கையடக்கத் தொலைபேசிகளை குறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாக இணையத்தளம் ஊடாக அறிவித்து, வங்கியில் பணத்தை வைப்பில் இடுமாறு கூறி, பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, நேற்று முன்தினம் (06) இரவு மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகஹ பிரதேசத்தில் தென் மாகாண கணனி குற்ற விசாரணை பிரிவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இச்சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலகஹ பிரதேசத்தைச் சேர்ந்த32 வயதுடைய ஆண் ஒருவரும் 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (07) முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad