மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இடர் முன்னாயத்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இடர் முன்னாயத்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டு. ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு! |  Athavan News
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடர் முன்னாயத்த முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

இம்மாதம் 14ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு இந்த இடர் முன்னாயத்த முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக மாவட்ட தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் அவ்வப்போது இயற்கை இடர்களினாலும் மனித செயற்பாடுகளினாலும் பாதிப்புக்களைச் சந்தித்து வருவதால் இவ்விதமான முன்னாயத்த விழிப்புணர்வுகளின் அவசியம் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷ‪pனி அழைப்புக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad