சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டுச் சபைக்கு மட்டக்களப்பிலிருந்து இருவர் தெரிவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டுச் சபைக்கு மட்டக்களப்பிலிருந்து இருவர் தெரிவு

ஊடகவியலாளரை பழிவாங்கிய மட்டு. மாவட்ட செயலகம்! | Tamil Page
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டுச் சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் இரண்டு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 08.09.2020 மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கதிரமலை சிவனேசன் என்பவரும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து வேல்நாயகம் குமணன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபைக்கு பிரதிநிதிகளாக மாவட்ட மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைப்படுகின்றவர்கள் தேசிய மட்ட கூட்டங்களில் அவர்களது பிரசன்னமும் பங்களிப்புக்களும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் அமுதகலா பாக்கியராஜா தலைமைத்துவ முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் முகாமைத்துவ பணிப்பாளர்கள் சமுர்த்தி மகா சங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad