எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபையில் கடமையில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் (25.09.2020) வெள்ளிக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டன.
காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார அலுவலகமும் இணைந்து இந்த பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபையில் கடமையில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைள் காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் வைத்து காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சகாதார பரிசோதகர் எம்.பசீர் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் மேற் கொள்ளப்பட்டன.
இதன்போது அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டதுடன் அவைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள பி.சி.ஆர். பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதிக்கப்படவுள்ளன.
காத்தான்குடி சுகாதார அலுவகத்தினால் இதுவரை 35 பேருக்கு கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment